சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

09.07.24
ஆக்கம் 154
அத்திவாரம்

சின்னக் காணி சீர் வரிசைச் சீதனம்
பன்னக் காணி பனை வேர் தறித்த சேதனம்
பென்னம் பெரியதோர்
மனை தொடரப் பேரானந்தமே

அன்னமிட்டு வளர்த்த
பெற்றோர் சொன்ன
வார்த்தை மாற்றாது
மங்கல விளக்கேற்றி
மூலதனமிட்ட அஸ்திவாரம் ஆனந்தமே

என்னென்னவோ திட்டம்
முன்னுக்குக் கிணறு
பின்னுக்குத் தோட்டம்
யன்னலருகே சமையல்,
குளியலறை என
இன்னுமின்னும் எண்ணி அஸ்திவாரம்
இட்ட ஆதீனம்
இன்று கண்ணுக்குள்
நிற்கும் ஆனந்த பவனம்
ஆனதே .