சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர்

02.07.24
ஆக்கம் 153
பள்ளிப் பருவம்

பள்ளிப் பருவமதில்
துள்ளிய உருவமதில்
அள்ளிய கருவினிலே

கொள்ளையிட்ட தெருவில்
வெள்ளைச் சட்டை
சப்பாத்து நுள்ளிய
சிவந்த மண் கறையினிலே

தள்ளி நின்று புள்ளியிட்ட பெற்றோர்
அள்ளி வாரி வழங்கிய ஆசிரியர்
நெல்லி மர நிழலில் கூடி

பஜனை பாடி முடிய விழுந்தடியாது வரிசையில் அமைதியுடன் செல்லும்
வகுப்பறையிலே
காத்திருந்த விஞ்ஞான
ஆசிரியை கனகவல்லி

இரசாயன கூடம் அழைத்துச் செல்லவே
” நேற்றுத் தயாரித்த ஐதரசன் சல்பைடு நல்ல
மணம் இன்றும் பரப்புகிறதே ” என்று

சொல்லவே மாணவர்
விழுந்து விழுந்து சிரித்தது பள்ளிப் பருவமதில் மறக்கவே முடியாத நினைவே .
அதுவோ கூழ் முட்டை மணமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து