வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.05.23
ஆக்கம்-268
வெறுமை போக்கும் பசுமை

வெறுமை போககும் பசுமை
வறுமை நீக்கும் திறமை
அருமை வளம் ஆக்க
மரமோ பெருகிடுமே

சுற்றாடல் எங்கும்
வெற்றிடமாக அங்குமிங்கும்
வெந்து வெதும்பும் வனங்கள்
கண்ணீரில் கருகிடுமே

அழிப்பதைத் தடுத்து
விழித்திடவே
முழித்திடும் இயற்கை
வளமோ செழித்திடுமே

பசுமையில் புசித்தவனும்
முழுசா புசித்து வசித்தவனும்
சாவா வாழ்வா என அழுதழுது
கொடிய நோயில் இப்போது
தவித்திடுவரே

மரமதனை நாட்டி
உரமான வளமதனைக் கூட்டிட
வெறுமை போக்கும்
பசுமை நிறைந்திடுமே .