27.09.22
ஆக்கம் 76
மழை நீர்
அதிக காலம் மழை இல்லை என்று
ஆலய வழிபாடு செய்த விவசாயி அன்று
மகிழ்ந்திடவே
மேகம் கறுத்தது வானம் இருண்டது
மெல்லிய காற்றுடன் கூடிய மழை
சோ எனப் பெய்தது
சிறுவர் கூடி ஓடி ஓடி அங்குமிங்கும்
வெள்ளத்தில் படகு விட்டு படகு மேல்
பூக்கள் போட்டு மிதக்க விட்டுப்
போட்டி போட்டனர்
பெய்த மழை நீரில் இழையோர் நனைந்து
மழலைகள் கையாலேந்திக் குடித்து
ஆடிப் பாடி மகிழ்ந்திடவே பெற்றோரும்
கலந்து துள்ளிக் குதித்து ஆனந்தக்
கூத்தாடினரே.