சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.08.22
ஆக்கம்-69
கலங்கரை விளக்குகள்
நாம் போட்ட மெட்டுக்கள்
எம்மில் முட்டுப்பட்ட மொட்டுக்கள்
பூப்போல மலர்ந்த இளஞ் சிட்டுக்கள்
நாளைய அரசியல் குட்டுக்களைக்
கட்டப்போகும் பூட்டுக்கள்

பட்ட துன்பம் போதுமென்று
சொட்டு இன்பம் இனிக் காணுமென்று
உண்மைக்கு மட்டும் உயிரூட்டி
பிழை சரியை நியாயத் தராசில்
நிறுத்திக் களைகள் பிடுங்கி
எறியும் கல் வேட்டுக்கள்

உலக தீபம் ஏற்றும் இளஞ் சமுதாயமே
இருள் மூண்ட வாழ்வில் ஒளி காட்டும்
வாழ்வின் எதிர்கால கலங்கரை
விளக்குகள்.