சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.07.22
ஆக்கம்-67
அப்பாவிகளால் விலகுந்தானோ
ஆறறிவு உடுத்த மனிதன்
ஐந்தறிவு மிருக உடை போர்த்து
பட்டினியால் கதறும் மாந்தரை வதைத்து
கடிததுக் குதறுவதும் சரிதானோ

பேரறிவு தொடுத்த இனம் குலைத்து
முட்கம்பியில் சிக்கித் தவிப்பவர்
சிக்கல் தீர்க்காது உளறுவதுமேனோ

எந்தறிவும் இல்லாத அரக்கர் போல
ஆணவ அடக்குமுறையால்
பொது சனக் கண்கள் தூக்கிலிட
கண்ணீர்ப் புகையில் சிதறுவதுமேனோ

அக்கிரம ஆசை கதிரையில் அமர்த்த
உக்கிர வேஷம் தலைக்கேற
உலையில்லாது கொதிக்கும் மாந்தரில்
அடக்கி ஆளும் பதவி வெறி உடைக்க
பாவிகளின் கலகம் அப்பாவிகளினால்
விலகுந்தானோ