18.01.2022
கவி ஆக்கம் -47
பாமுக பூக்கள்
ஆவலாய் அரங்கேறும் பூக்கள்
பாமுக முகவரி தந்ததே
இருபது கவிஞர் இணைந்ததே
பாவையரோடு வாரம்,மாதம்,
வருஷமெனப் பல காலம்
ஓடி மறைந்ததே
ஆக்கதாரியை ஊக்கமாகத்
தன் மார்ககமாகத் தட்டிக் கொடுத்த
வேகமே ஊற்றுக் கவிஞனாய்
பாமுகப் பூக்களாய் நறுமணமுடன்
பூத்ததே
என்றும் போற்றும் பாமுக அதிபர்
நடா மோகன் அன்றூன்றிய விதைகள்
முளைத்து கிளை விட்டு மரமாகிப்
பூத்துக் குலுங்க மகத்தான சேவையானதே
நன்றி நன்றி என்ற வாழ்த்துகளுடன்
பாமுகப் பூக்களின் இதழ் கோர்த்த
பாமாலை எனும் பூமாலையிட்டுப்
போற்றிடுவோமே.