வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.05.23
ஆக்கம் -267
பரிதாபம்

தாயின் மடியில் தவண்டு
புரண்டு உருண்ட மழலை
வளர்ந்து குலம் காக்குமென
நினைத்தது நிலை குலைந்து
போனதே

சின்னஞ் சிறுசாய் இருக்கையிலே
பிஞ்சில் பழுத்தது போல
மிதமிஞ்சிய ஆசையில்
பென்னம் பெரிய களவில்
கன்னம் வைத்துக் கையோடு
பிடிபட்டதே

அந்நிய நாட்டுக் கலாச்சாரம்
தவறான நட்பு , தடுமாறும் குடி
போதையில் பாதை மாறி
நின்றதே

நொடியில் பணஞ் சேர்க்க
கூத்தாடி பற்றிக் கஞ்சாவை
விற்கவே பிடிபட்டு
சீக்கிரமாய் சிறை புகுந்து
சீரழிந்து உருக்குலைந்து
உயிர் போனதே பரிதாபமாய் .