20.04.23
ஆக்கம்-265
ஏங்கும் மனம்
உயிரில் உரிமையுடன் ஊக்கமிட
பயிரை வளர்த்துப் பார்ப்பது போல்
புத்துயிர் தந்து சத்துயிராக்கினாள்
எத்தனை துன்பம் வந்திடினும்
அத்தனையும் இன்பமாக்கினாள்
அன்பே இன்பமயம்
அவளோ தெய்வமயமாய்
எனக்கு அன்னை ஆனாள்
என் கண்ணிற்கு ஒளியூட்டி
தன் நெஞ்சில் நிறுத்தி
அன்புக்கு இலக்கணம் ஆனாள்
என் ஒவ்வோர் அசைவிலும்
பரவசமூட்டி கண்ணை இமை
காப்பது போல காவலாளியானாள்
எங்கு பார்த்தாலும் அவள் முகமே
ஏதோ மனம் ஏங்குதே என்றும்
என்னுடன் வந்திடு என்று
நன்றியாய் ஒன்றே ஒன்று -அது
கண்ணில் நிறையும் அந்தக்
கண்ணீரே காணிக்கை .