சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.03.24
கவி இலக்கம் -138
பெண்மையைப் போற்றுவோம்

விவேகத்தால் புலியை முறமோடு
விரட்டி விரட்டி அடித்துத் துரத்திய
வீரத் தாய் பெண்மை போற்றுவோம்

பத்து மாதம் சுமந்து தந்த துன்பம்
அத்தனையும் இன்பமாய்த் தாங்கிப்
பெற்றெடுத்த பெருமை போற்றுவோம்

நெற்றித் திலகமிட்டு” வெற்றியுடன்
திரும்பி வா மகனே ” எனச் சொல்லி
அனுப்பிய தாய்மை போற்றுவோம்

கல்லானாலும் கணவன் புல்லானாலும்
புருஷன் என்று எல்லாக் கஷ்டம் தாங்கி
ஏழ்மையை எளிதாக்கும் வல்லமை

குருவிக் கூடெனும் குடும்பம் கட்டிக்
காத்து குடும்பம் ஒரு கோயில் ஆக்கும்
பெருமைப் பேறு பெற்ற பெண்மையைப்
போற்றுவோம் .