சந்தம் சிந்தும் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.03.24
ஆக்கம் -136
பகலவன்

அதிகாலையில் முகஞ் சிவக்க
அடிவானம் குதித்திடுவான்
ஆயிரமாயிரம் வேகமோடு
பாரினில் பதித்திடுவான்

காலமெல்லாம் இனிது வாழக்
காத்திருந்து கனி தருபவன்
காணுமிடமெலாம் மேனி தழுவி
சேர்த்திருந்து ஒளி ஊடுருபவன்

பசித்தவர்க்கு வயிறு நிறைய
வாரி வழங்குபவன்
பச்சைப் பசேலில் உரமூட்டுபவன்
அசுத்த நீரில் விளையாடி சுத்தம்
தந்து தாகம் தீர்ப்பவன்

மின்சாரமதில் முத்திரை பதிப்பவன்
சருமமதில் புத்துயிர் சாதிப்பவன்
உருவ நோய்க்கு மருந்தாகுபவன்
மனிதனுக்கு வித்திட்ட புனிதன்
வணங்கிடும் பகலவன் .