வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.09.23
கவி இலக்கம்-283
விழி பிதுங்கும் உடல்

பூவுலகில் பிறந்ததும்
இவ்வுடம்பு படும்பாடு

பாழாய்ப் போன பழக்க-
வழக்கம் தோளில் சுமக்க
அடம் பிடித்திட

நாளும் பொழுதும் வேணும்
வேணுமென வருந்தி
உழைத்து கொடிய நோயில்
உழுதுண்ட மண்ணில்
உரமாயிட

கழு மரத்திலேறிக் கதி
கலங்குமளவு மீறிய ஆசை
பசுமரத்தாணியாய்ப்
பதிந்திட

இருப்பதை விட்டுவிட்டு
இல்லாததற்கு ஏங்கி
இங்குமங்கும் சிறகு
விட்டுப் பறந்திட

எது வேண்டும் மனிதா
உனக்கு அதுவோ
சிந்தியாது உறக்கம்
இன்றி விழி பிதுங்கும்
உடல் எதற்கு ?