வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.07.23
கவி இலக்கம்-276
வரப்புயர

வாழ்வில் வீசுங் காற்று
திசையை மாற்றிடுமே

கொரோனாவால் ஒடிந்து
மடிந்தும் மனிதன் தன்
விடாமுயற்சியினால்
தனக்கெனத் தொழில்
தேடியதே

தேவையற்ற செலவு விட்டு
வாகனத்தில் போவது நடைப்
பயணமானதே

செயற்கை மருந்து விடுத்து
இயற்கை மருந்து உரமானதே

படிக்க மறந்தவன் திரும்பத்
திரும்ப படித்து பட்டம் பெற்று
நல்ல வேலை கிடைத்தும்
வீட்டுத் தோட்டமதில்
இறங்கி விளைச்சல் பெருகியதே

வரப்புயர நீருயரும் நீருயர
நெல்லுயரும் என்பதைத்
தொடரவே

தன் செலவு குறைத்து
உதிரத்தை வியர்வை ஆக்கி
சொந்தக் காலில் விந்தை
ஆனாரே .