வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

08.06.23
கவி இலக்கம்-272
எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே

தமிழனுக்குத் தமிழே தாய்மொழி
குழந்தைகளிற்கு அதுவே உயிர்
மூச்சாகும்

தரணியில் நிமிரத் தாயின் வடிவம்
உயர்த்தும் மொழிப் பேச்சாகும்

தமிழைக் கற்கும் சிறுவர்
அமுதம் போல சுவைத்து சுவைத்து
உண்டால்தான் உதிரமுடன்
கலந்த வீச்சாகும்

12 உயிரெழுத்தும்,18 மெய்யெழுத்தும்
சேர 216 உயிர்மெய்யெழுத்தும்
எழுத்தின் வித்துக்களில் நீர்
பாய்ச்சாகும்

எழுத்தெனும் வித்தானது முளைத்து
மரமாகிப் பூக்கும் சொற்களே
உதிர்ந்து மீண்டும் விழுதுகளாகும்

முதுகில் புத்தகம் சுமக்கும் சிறுவர்
மனதில் அகத்தில் தமிழ் மொழி
சுமந்து இனிமையாகப் பேசி
மகிழ்வூட்டித் தாகந் தீர்க்கும்
எழுத்தின் வித்தே பூத்தெழும்
தமிழே முழுமூச்சாகிடுமே .