வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.06.23
கவி இலக்கம்-271
இன்னும் தொடருமா
இந்த வாழ்வு

நச்சுப் பாம்புகள் நாலு பக்கமும்
தாய் மண்ணில் உச்சம் தொடும் வேளை
மிச்சம் மீதியின்றிய வாழ்வில்
சொச்சமும் கூச்சமின்றிக்
கூனிக் குறுகுதே

குடியும் கும்மாளமும் கூத்திட
பொடியும் போதையும் துரத்திட
அடிதடியோ ஆவேஷமாய்
நச்சுப் பாம்புகள் திருகுதே

குண்டு வீச்சிலும் இன அழிப்பிலும்
பிழைத்தது ஏன் என ஏங்குதே
வாழ்ந்த நாட்கள் புரியாது
மாந்தர் வயிறு எரியவே
வாழும் நாட்கள் வீணாகப் போகுதே

தாமும் திருந்தாது
மற்றவரும் திருந்தவிடாது
நாளும் பொழுதும் மூளும்
இந்த வாழ்வு சாகும் வரையிலும்
என்றுந் தொடருமா