சந்தம் சிந்தும் கவிதை

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 30 கவிதை தலைப்பு : காதல்
நாள்: 15.02.2022

கண்பார்க்க கருவிழி அசைய
இதயம் பேசும் மொழி காதல்!

மனம் நினைப்பதை
மௌனமாகக் கனைக்கும் விழி காதல்!

மண்ணைப் பார்த்து நடக்கும் பெண்ணை!
தன்னை பார்க்க வைப்பதும்! காதலர் தினத்தில் கோரிக்கை வைப்பதும்!

கடைசிவரை கைகோர்ப்பதும் உண்மை காதலின் உச்சம்!

இருபது வருட உறவை
இருபது நிமிட நட்பால்
உதறித் தள்ளும் சக்தி காதலே!

சக்திவாய்ந்த காதல்
மோதலில் முடியாமல்
சாதலின் விடியாமல்
சாதிக்க துணிந்தால்
காதல் எல்லோருக்கும் கடவுளே!

நன்றி! வணக்கம்!