தியாகமே தீர்ப்பானதா ? கவி…..ரஜனி அன்ரன் (B.A)…..21.09.2023
பட்டினி மறந்து பசித்தீயை ஒறுத்து
பன்னிருநாள் வேள்வியிலே
பற்றின பற்றால் மொழிப்பற்றால் இனப்பற்றால்
பாரே வியந்து நிற்க நாமும் பார்த்திருக்க
பற்றினான் தியாகத்தின் உச்சத்தை
பார்த்தீபனாம் எங்கள் அண்ணல்
பார்த்தீபனின் தியாகம் தீர்ப்பானதா?
பாராமுகமாக இருந்த பாரதமே பதில்சொல்லு !
ஆண்டுகள் முப்பத்தியாறு ஆனபோதும்
பார்த்தீபனின் தியாகமும்
சாத்வீகப் பயணமும்
சாத்தியம் ஆகவில்லை இன்னும்
தீராத பசியோடு தான் இன்னமும்
பார்த்தீபனின் தியாகமும் கனவானதே !
அறவழிப் போருக்கு அத்திவாரமிட்டு
அகிம்சையெனும் ஆயுதமேந்தி
தன்னை உருக்கி தீபமாய் ஒளிர்ந்து
தியாகியான பார்த்தீபனின்
தியாக நினைவேந்தலை நினைவுகூரவே
நீதிமன்றமே தடை போடும் போது
தியாகம் எப்படித் தீர்ப்பாகும் ?
தீர்ப்பும் இல்லை தீர்வும் இல்லையே !