“ உச்சம் தொட்ட மக்கள்தொகை “கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.11.2022
உச்சம் தொட்ட மக்கள்தொகை
அச்சம் கொள்ள வைக்குதே உலகை
எண்ணூறு கோடியினை
எட்டித்தான் விட்டது
இதில் சீனாவும் இந்தியாவும்
முந்தித்தான் கொண்டது
பூமிப்பந்து தாங்குமா
பூதாகரம் தான் வெடிக்குமா !
மருத்துவம் தொழில்நுட்பம்
சுகாதாரம் விழிப்புணர்வு
ஆரோக்கிய வாழ்வு ஆயுட்கால நீடிப்பால்
மின்னல் வேகத்தில் குடித்தொகைப் பெருக்கம்
மனித அபிவிருத்தியில் மைல்கல்லாகி
உச்சம் தொட்டதே எண்ணூறு கோடியினை !
பெருகிவரும் மக்கள் பெருக்கம்
அருகி விடுமே நீர்நிலவள பற்றாக்குறை
உருகி விடுமே பனிப்பாறைகளும்
காடுகளை வளர்த்து களனிகளைப் பேணி
நெகிழியை விடுத்து நீரினைச் சேமித்தால்
நிலமும் செழிக்கும் நிம்மதியும் கிடைக்கும்
எதிர்கால சந்ததிக்கும் அனுகூலமாகுமே !