“ உருமாறும் புதிய கோலங்கள் “ ……..கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.02.2022
வாழ்வியலின் வண்ணத்தை
வாழுகின்ற வாழ்வினை
புரட்டிப் போட்டது கொரோனா
அமைதி இழந்தது மனங்கள்
ஆற்ற முடியாத் துயரங்கள்
கோலங்கள் மாறி அலங்கோலமானது வாழ்வு !
முடக்கங்களும் கட்டுப்பாடுகளும்
முடக்கிப் போட்டது வாழ்வை
கட்டுக்குள் வரவில்லை கொரோனாவும்
உருமாறுது வைரஸ்சும்
உருவாகுதே புதிய கோலங்களும் !
உருமாறும் வைரஸ் ஒருபக்கம்
உக்ரைனுக்கும் ரஸ்சியாவிற்கும்
உக்கிரபோர் வெடிக்கும் அபாயம் மறுபக்கம்
உலக நாடுகளும் இப்போ பதற்றம்
உக்கிரைனுக்கு உதவ நாடுகள் பலவும் முண்டியடிப்பு !
எல்லைகளில் படைகளும் குவிப்பு
எரிவாயுவிற்கும் எண்ணைக்கும் தட்டுப்பாடு
எளிதில் வந்திடுமோவெனவும் அங்கலாய்ப்பு
ஐரோப்பிய எல்லை நாடுகளும் அச்சத்தில் உறைவு
உருமாறும் புதியகோலங்கள் உருவாக்குமா அமைதியை ?