வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி இலக்கம் 2094
மொழியும் கவியும்..!!
மொழியும் கவியும் கவி மொழியும்
அழியா உலகில் ஆழமாய்ப் பதியும்
விழியாய் தமிழ் விதைப்பாய் ஆகும்
விண்வரை அதன் புகழாய் மேவும்..!
உணர்விழைந்த மொழி கதை பின்ன
உகந்தொரு செவி அதைக் கேட்க
நிதமொரு வண்ணம் மாறும் மெல்ல
நினைவுகளாய் பின்னல் போடும்..!
தாய் மொழி உலகை ஆளட்டும்
தலைமுறை பேசியே பேணட்டும்
நிலைத்திடும் சந்ததி நீட்சியில்
நிலைகுலையா கவி சேதி ஆகட்டும்..!
ஆணிவேரே அன்னைத் தமிழே வாழ்க
ஏணி போன்றே ஏற்றிட வாராய்
மொழியும் கவியும் இரட்டை வரவாய்
எழிலும் கொஞ்ச இனிதே வாழ்க..!
சிவதர்சனி இராகவன்
23/1/2025