மொழியும் கவியும்
மூத்த மொழியானவரும் நீயே
மூதறிஞர்கள் சிறப்பித்ததும் தானே
மூலமே தாயானதும் பிறப்பே
முதலெழுத்தாய் மொழியான சிறப்பு
உலகமொழிகள் பலதுண்டு பாரினில்
உயிராய் மெய்யாய் உயிர்மெய் வடிவில்
உருவான மொழியும் பலதேகண்டு வியப்பில்
உருவகப் படுத்தலும் சிலதேயுண்டு களிப்பில்
இலக்கண இலக்கிய சொல்வளமுண்டு
இடைஉரி போல இதமும்முண்டு
இசை தரும் மொழியில் அழகும்முண்டு
இடர்படா நிலையில் கவியுமுண்டே.