மார்கழி வந்தாலே
பகலவன் குறைந்து
பாதியாய் வந்துடும்
பரிதியும் கடந்து
பனியாய் மாறிடும்
தெருவோர மரங்களும்
பழுப்பாய் காட்சிதரும்
புற்களும் அழகாய்
வெண்மையாய் மாறிவிடும்
தென்றலும் இல்லாது
அமுக்கமாய் இருந்திடும்
தேகமும் சோர்வாய்
தூக்கமாய் வந்துவிடும்
இல்லமும் உள்ளமும்
விழித்தெழ வைத்திடும்
இருந்தும் மகிழ்ந்திட
இயற்கையும் நிலைக்கனும்