மார்கழி குளிர்
மார்கழி குளிரது மனதை வாட்டுது
கார்கழி காலம் கவலையைக் கூட்டுது
நேர்வழி நடப்பு நேர்மையை காட்டுது
நெஞ்சினில் ஓர் நினைப்பு நிம்மதி கொடுக்குது
குளிரும் கூதலும் காலத்தின் நகர்வில்
பழியும் பாவமும் செய்கின்ற செயலில்
அளிக்கும் இன்பமும் அன்பென்ற சொல்லில்
களிக்கும் காலமும் கடிகார முள்ளில்
வருடத்தின் நிறைவை காட்டும் மாதம்
வந்தால் பனியும் மூசிப்பெய்யும்
பெருமையும் இதற்குண்டு பேராற்றல் கண்டு
அருமையும் அகத்தினுள் இன்பம் பூத்து
நகுலா சிவநாதன் 1789