“ மல்லிகை இதழின் ஆசான் “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 27.06.2024
மண்வாசம் வீசும் மல்லிகை இதழின் ஆசான்
மாதம் தோறும் மணக்கும் இதழாக
மல்லிகையை வாசம் வீச வைத்து
ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு
ஈடில்லா சேவைகள் செய்து
வரலாற்று நூலாக சுயசரிதம் படைத்த
டொமினிக் ஜீவா ஐயா மண்ணில் உதித்தநாள்
ஆனித்திங்கள் இருபத்தியேழு !
படிக்காத மேதை பட்டறிவு ஞானி
பத்திரிகையாளன் பன்முக ஆளுமையாளன்
மனிதாபிமானி முற்போக்குச் சிந்தனையாளன்
நவீன தமிழ் இலக்கியத்திற்கு வற்றாத ஜீவநதி
மல்லிகை ஆசான் டொமினிக் ஜீவா ஐயா !
சாகித்திய விருதுபெற்ற இலக்கியவாதி
சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்ட ஆசான்
கட்டுரைத் தொகுப்புக்களைத் தந்த எழுத்தாளன்
கலை இலக்கிய வாதிகளுக்கு களம்கொடுத்த கலைஞனின்
விலை மதிப்பில்லாத பொக்கிஷமாம் மல்லிகை
காலச் சூழ்நிலையால் கசங்கி விட்டதுவே
காலம் கடந்தாலும் இன்றும் பேசப்படும் இதழ் மல்லிகையே !