மலையின் விந்தை
மலையின் விந்தை கண்டு கண்டு
மாட்சி யெனக்குள் உதிக்கிறதே!
நிலையில் ஊற்றாய் நிதமும் அருவி
நிற்கும் பெருமை அறிவீரோ
கலையில் இறைவன் படிமம் உருவாய்
கடைந்து எடுக்கும் மலையின்கல்
சிலையை வடிக்கும் சிப்பி காணும்
சிறப்புக் கல்லும் மலையிலன்றோ!!
அருவி பாயும் அழகு தோற்றம்
அகத்தை மயக்கி யிழுத்திடுமே!
உருகி வீழும் வெள்ளப் பெருகி
ஓடி மனத்தில் பாய்கிறது!
துருவித் எழுமே சிந்தை கண்டு
துாணாய் நிற்கும் மலையையெண்ணிக்
கருவி யாகக் கல்லைக் கண்ட
காலம் அன்றோ கற்காலம்!
நகுலா சிவநாதன் 1767