🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-46
02-01-2024
மலர்க புத்தாண்டே
மலர்க புத்தாண்டே
மனித நேயத்துடன்
தேக்கம் ஏதுமின்றி
தெளிந்த நீர்போல
மனத்தில் மகிழ்ச்சியும்
மண்ணில் வளர்ச்சியும்
தேகத்தில் புத்துணர்ச்சியும்
தேசத்தில் மறுமலர்ச்சியும்
ஏக்கங்கள் தீர்ந்து
ஊக்கங்கள் தொடர்ந்து
நோக்கங்கள் தெரிந்து
நேசங்கள் கொண்டு
மணவாசம் கொண்டு
மதவெறி அற்று
மனநோய் அகன்று
மலர்வாய் நீயும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்