சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாசி

மாண்பு மிக்கது மாசி
மாசறுக்குமது அருளை வீசி

மாசி முப்பது நாளும்
பூசிக்க வைக்கவே முகாமிடும்
புதுமை விழாக்கள் வழிபாடுகள்
புனித நீராடல்கள் விரதங்கள்

வந்திடும் விழாக்களோ பலரகம்
தந்திடும் வழிபாடுகள் இகபரம்
பொழிந்திடும் விரதங்கள் சுகநலம்
தந்திடும் புனிதநீராடல் பாவவிமோசனம்

தானமும் தருமமும் சிறக்கும்
தர்ப்பணமும் தடையின்றி நடக்கும்

நீர்நிலைகளில் சுரக்கும் அமுதம்
நீராடலால் கரையும் பாவம்

விழுமியம் காணும் ஏற்றம்
விவேகத்தில் பிறக்கும் மாற்றம்
வழுப்பளு கழன்று போகும்
வம்பளப்பு மண்டியிட்டு மயங்கும்
வாழ்வாங்கு வாழுமெண்ணம் ஓங்கும்

மனோகரி ஜெகதீஸ்வரன்