கவியழகு
கற்பனையே உயிர்மூச்சு
கவிக்கெனவே ஆச்சு
கவியழகு தருமதன் ஒப்பனை
கருவும் காணுமதனால் விற்பனை
பொய்மைப் புனைவும் செய்யும்
நெய்யும் கவிதைக் கழகு
தொய்வு அறுத்து நுகர
எய்வர் இதனைக் கவிஞர்
எதுகை மோனைச் சந்தம்
உவமை தற்குறிப்பேற்றவணிவ கைப் பந்தம்
கவியது கொள்ளின் சொந்தம்
காமுற்று மனமருந்த முந்தும்
காவிடக் கரங்கள் தாங்கும்
கவியும் எங்கும் சிந்தும்
சொக்க வைக்கும் சொல்லாட்சி
கக்கி நிற்பதும் கவிக்கழகு
நக்கி நயக்கவுமது இலகு
சிக்கி நிற்குமதில் உலகு
கவியழகு காணவேண்டுமா
காணுங்கள் கம்பனை
மனோகரி ஜெகதீஸ்வரன்