விருப்பத்தலைப்பு
(நன்றிப்படையல்)
காவிகள் கரங்கள் கோர்த்த
மாவிலைத் தோரணங்கள் ஆரமிட
கூவித்தாவி மனமும் கூத்திட
அள்ளிவைத்த புள்ளிகள் கோலமிட
துள்ளிப்பறந்து வெடிகள் சத்தமிட
பாலும் சக்கரைப்பாகும் சேரப்
பொங்கியது பொங்கல்
நாலும் சேர்த்தே ஆதவனுக்கு
நன்றியுடன் படைத்தோம் படையல்
ஆதவக் கரங்கள் தீண்டி
அதனை உண்டது விரும்பி
சாதனை மனிதராம் உழவர்க்கும்
சாத்தினோம் நன்றிப் போர்வை – எம்
சாதகச் செயல் கண்டு
சவுக்கடி பட்டு மிரண்டு
பாதகமும் போனது திரும்பி
கருணைக் கோர்வையே உழவர்
உடலது சிந்தும் வியர்வை
திருவைத் தீர்வைக் கொடுத்துக்
காப்போம் அவரது வாழ்வை
மனோகரி ஜெகதீஸ்வரன்