சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு

பஞ்சம் பழிபற்றிச் சூழ
நெஞ்சம் அஞ்சித் துவள
கெஞ்சிக் கூனி கூத்தாடிக்
காத்தாடியாகி
நடுநடுங்கி நாச்சுருண்டு வாழவோ
உன்மடி தவழ்ந்தோம் அன்னையே

தளிரும் மலரும் காயும்
கனியும் மணியும் முத்தும்
நெல்லும் குவிந்த புலத்தில்
குருதி புகுந்தது ஏனம்மா
உறுதி குலைந்ததும் ஏனம்மா
கருகிய உடல்கள் குவிந்ததுமேனம்மா
கண்ணியம் காணாது போனதுமேனம்மா

நீயூட்டிய பாலில் பேதமுண்டோ தாயே
இனமதமொழிச் சாயமுண்டோ தாயே

நாம்காயம் கண்டதற்கு
காரணமென்ன தாயே
காட்சிச் சாட்சிச் திரிபுகளுக்கும் காரணமென்ன தாயே
சூழ்ச்சி வலையில் சீக்கினையோ
ஆட்சி இழந்ததோ உந்தன் அன்பு

வாயே திறவா உந்தன் மௌனம்
தாயே உனக்கு தகுமோ?
சேயே நாமுனக்கு
சோதியில் கலக்கும் வரைக்கும்

தங்கித் தன்மானத்துடன் வாழத் தாதரை
ஏங்கி வதங்கா முறை

மனோகரி ஜெகதீஸ்வரன்.