சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

வசந்தம்

பருவத்துள் இவள்பெயரே வசந்தம்
பாருக்கு இவளே பெருஞ்சொந்தம்

காரகல வந்தே சேர்வாள்
கருணையைப் பூட்டியே ஓய்வாள்
தென்றலைக் கூட்டியே வருவாள்
தேகத்தை மீட்டியே செல்வாள்

வசந்தமிவள் சிந்துவாள் சுகந்தம்
வசமிழக்கவும் சூட்டுவாள் பலவண்ணம்

பூத்துப் பூக்களும் புதுவகை மெத்தையிடும்
ஈக்களும் மொய்த்துண்டு
சேர்க்கைக்கு உதவும்

தளிர்களும் பெருகி
மரங்களை மறைக்கும் தன்னியல்பால் வாவென அவையும் கையசைக்கும்
தாவியோடும் அணிலும்
குருவிகிளியும்
கனிசுவைக்கும்
தாமுண்ட பின்னே விதைவீசி விதைக்கும்

குயிலும் கூவும் குரலெடுத்து
குரங்கும் தாவும் மகிழ்வுடுத்து
பயிலும் பசுமை அரங்கெடுத்து

காகம் கட்டும் கூடு
சுள்ளி பொறுக்கித் எடுத்து
நாவும் கொட்டும் பாவை
நற்றமிழை நாணிடாது தொடுத்து

மனோகரி ஜெகதீஸ்வரன்.