சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 248
09/01/2024 செவ்வாய்
வசந்தத்தில் ஓர் நாள்..
—————————
ஊரெல்லாம் பூச் சொரிய…
உளமெல்லாம் கிளு கிளுக்க..
பாரெல்லாம் கல கலக்க…
பச்சைநிற பாய் விரிக்க!
கார்கொண்ட முகில் அகல..
கண கணப்பாய் சூடேற..
வேர்கொண்ட விதை பிளக்க..
வெடித்திரண் டிலையும் விட!
பூக்கரசி கண் விழிக்க…
புதிதுடுத்து உலாவும் வர….
பூந்தென்றல் மருவிச் செல்ல..
புள்ளினமும் இசை மீட்க!
வண்டினங்கள் மதி மயங்க..
வானரங்கள் கூச்ச லிட…
கெண்டைமீன் துள்ளி விழ..
கேழ்வரகுக் கதிர் முறிய!
குஞ்சரங்கள் குழல் ஊத..
குளநண்டு குடை பிடிக்க..
வஞ்சியென வசந்த மக(ள்)..
வந்துதித்தாள் வளம் காண!
நன்றி
மதிமகன்