சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 195
11/10/2022 செவ்வாய்
“ஒன்றுபட்டு…..”
————————
ஒன்று பட்டு நிற்போம்என்றோம்!
ஒரே குரலில் கேட்போம் என்றோம்!
இரண்டு பட்டே என்றும் நின்றீர்!
இரண்டும் கெட்டான் ஆக்கி விட்டீர்!
வானில் பறக்கும்மழைக்கண்ணி
வடிவ அமைப்பை நீயும் கவனி
தேனில் தினம் நனையும் தேனீ
தேறும் நிலை பாரும் உன்னி!
அழகில் காக்கை கறுப்புத் தான்
ஆனால் ஒற்றுமை சிறப்புத் தான்!
வலையில் சிக்கிய புறாவைத் தான்
வாழ வைத்ததும் ஒன்றுமை தான்!
எறும்பு மற்றும் கறை யானையும்
எழிலாய் காப்பது ஒற்றுமை தான்!
இரவில் மலரும் மல்லிகையும்
எழிலாய் தெரிவது கூட்டால் தான்!
அலைகடல் ஓர அடம்பன் செடியும்
அடர்ந்து நிற்பதில் ஓர் மிடுக்கு!
நிலையா உலகில் நீயிதை உணர்ந்து
நிம்மதி காண்பது உன் பொறுப்பு!
நன்றி
மதிமகன்