சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-182
19/07/2022 செவ்வாய்
“வேணும்…வேணும்…”
வாழ்க்கைக்கு இலக்கு வேணும்
வரவு செலவிற்கு கணக்கு வேணும்
ஏற்க முன் எண்ணம் வேணும்
எண்ணத்தில் தெளிவு வேணும்!
பிரயாணத்திற்கு துணையும் வேணும்
பிறழ்வடையா குறிக்கோள் வேணும்
பரிமாணத்திற்கு எல்லை வேணும்
பாடலென்றால் இசையும் வேணும்!
வருடத்தில் ஓர் வேண்டுதல் வேணும்
வாழ்ந்துகாட்ட ஓர் வரைவு வேணும்
குருவியெனிலும் சேமிப்பு வேணும்
கொள்கையிலும் பிடிப்பு வேணும்!
தவறியதை செய்ய முயற்சி வேணும்
தானம் செய்வதற்கு சிந்தனை வேணும்
குன்றும் மலையெலாம் குலாவிட வேணும்
கூட்டாக எல்லோரும் ஊர்சுற்ற வேணும்!
இவ்வருடம் நோயெல்லாம் நீங்கிட வேணும்
இயற்கையும் தன்போக்கில் செழிக்க வேணும்
ஒருவரிடமும் முரண்படா வாழ்க்கை வேணும்
ஒருமனமாய் உண்மையாய் வாழ வேணும்!
நன்றி
மதிமகன்