சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:202
29/11/2022 செவ்வாய்
நினைவு நாள்
———————
நெஞ்சு கனத்திடும் நாள்
நிம்மதி இழந்திடும் நாள்
பஞ்சு மெத்தை யெங்கும்
பாறாங் கல் லாகிடும் நாள்!
கொஞ்சு மொழி அஞ்சுகமும்
கோட்டான் ஆகிடும் நாள்!
விஞ்சு மவர் வீரர் புகழ்
விண்ணதிர உரைக்கும் நாள்!
கெஞ்சு கின்ற தாய்மார்கள்
கேரல் குரல் கேட்கும் நாள்!
குஞ்சு முதல் குமரர் வரை
குனிந்த தலை நிமிரா நாள்!
நஞ்சுக் குப்பி வேங்கை யவர்
நலமெல்லாம் பேசும் நாள்!
வஞ்சத்தால் உயிர்கள் போய்
வாழ்வு சிதறிய-நினைவு நாள்!
நன்றி
மதிமகன்