சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 291
07/01/2025 செவ்வாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
———————————
மெல்ல விலகுது பழையது!
மெதுவாய் நுழையுது புதியது!
அல்லல் துன்பமும் அகலுமா!
அடுத்த புத்தாண்டு சிறக்குமா!
இருபத்து நான்கில் இனித்தது,,
இதயம் முழுவதும் நிறைத்தது..
இருபத் தைந்திலும் இருக்குமா!
இன்பம் நிறைவாய் கிடைக்குமா!
மத்திய கிழக்கு வெளிக்குமா!
மகிழ்வு தந்திடப் பிறக்குமா!
சத்தியம் நேர்மை ஜெயிக்குமா!
சகலதும் நன்மையில் முடியுமா!
சரித்திர மாற்றம் நிலைக்குமா!
சரியாய் தொடர்நடை போடுமா!
நரித்தனம் மீண்டும் நுழையுமா!
நம்மவர் வாழ்க்கையும் சிதறுமா!
இல்லாமை இல்லாது ஒழியட்டும்!
இருப்பவர் கைகளும் நீளட்டும்!
கல்லாமை அறவே போகட்டும்!
கற்றவர் நிலைகளும் உயரட்டும்!
சாந்தி சமாதானம் நிலவட்டும்!
சாதி வியாதியும் அகலட்டும்!
காந்திகள் மீண்டும் தோன்றட்டும்!
களைதரு புத்தாண்டு பூக்கட்டும்!
நன்றி
மதிமகன்