சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 287
27/11/2024 செவ்வாய்
உயிர்க்கொடை
————————-
நற்கொடைக்குக் கர்ணன்-அவன்
நானிலம் போற்றிடும் மன்னன்!
தற்கொடைக்கு மறவன் -அவன்
தாய்நிலம் ஏத்திடும் புதல்வன்!
நெஞ்சின்வெளியே நஞ்சு-அவர்
நெஞ்சினில் உள்ளே பஞ்சு!
வெஞ்சினம் கொள் மறவர்-அவர்
வேற்றோரைக் கண்டு மருளார்
வானமே அவர்தம் கூரையாகும்!
வனாந் திரமேபஞ் சணையாகும்!
மானமே யவர்மனத் திருப்பாகும்!
மாண்பு என்பதவர் விருப்பாகும்!
கொடையில் உச்சம் தற்கொடை!
கோணாமல் செய்தது அப்படை!
படையில் இதற்கு தனிப்பிரிவு..
பாரே கண்டது இத்துணிவு!
உச்சம் தொட்டது புகழ்-பேர்
உச்சரித்தது மக்கள் இதழ்
அச்சம் கொண்டது அகிலம்
அதனால் விளைந்தது அவலம்!
நன்றி
“மதிமகன்”