சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 286
19/11/2024 செவ்வாய்
“பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல; காலமுறையினானே!”
—பவணந்தி முனிவர்
“மாற்றம்”
————-
மாற்றம் ஒன்றே மாறாதது…..
மண்ணி லிருந்து வேறாகாதது!
காற்றும் அசைவும் ஒன்றானது,
காலங் காலமாய் விலகாதது!
நாலதில் தன்னில் நகர்ந்து
நாமே இரண்டில் நிமிர்ந்து
வேலவள் விழியினில் வீழ்ந்து
விரும்பாது மூன்றில் சாய்ந்து..
வாழ்வினில் எத்தனை மாற்றம்
வரவும் செலவுமாய் சாற்றும்..
காழ்ப்பது செய்வது நாற்றம்
கடந்து போவதே ஏற்றம்!
வீதியின் விதிகள் மாறாதது!
விதியின் வலிகள் ஈறாகாது!
சோதியும் ஒளியும் மாறாதது!
சுடரும் எழிலும் வேறாகுமா!
அரசின் திசைகள் மாறலாம்!
அழிவில் இருந்தும் மீளலாம்!
உரசல் போக்கதும் தீரலாம்!
உரிமை, சமநிலை பேணலாம்!
நன்றி
மதிமகன்
குறிப்பு
…………
வழுவல- குற்றமில்லை
காழ்ப்பு—வெறுப்புணர்வு