சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 277
10/09/2024 செவ்வாய்
“வலி”
——
வலிகள் நிறை இவ்வுலகு!
வராமல் பார்த்து நீ ஒழுகு!
வருவது உணரின் நீ விலகு!
வந்திடின் ஏற்று நீ பழகு!

சிரசில் இருந்து பாதம் வரை,
சிரமம் தந்திடும் இப்பூமி தரை!
அரசன் முதல் ஆண்டி வரை,
அதற்கு உண்டோ ஏதும்வரை!

வாழ்வே வலியின் வாகனமாம்!
வாழும் முறையே சாதனமாம்!
மீள்வே தந்தால் ஆதனமாம்!
மீண்டு வந்தால் வேதனமாம்!

கல்லு எங்கே பட்டிடினும்,
காலைத் தூக்கிடும் நாயினம்!
முள்ளு எங்கே தைத்திடினும்!
முடிவில் வலிக்குமே எம்மிதயம்!

கல்லால் பட்ட கடும்வலியும்,
காயம் காய்ந்திட மாய்ந்து விடும்!
சொல்லால் பட்ட சிறுவலியோ,
சொர்க்கம் வரை சேர்ந்துவரும்!
நன்றி
மதிமகன்