சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 276
13/08/2024 செவ்வாய்
பருவம்
————
இயற்கையின் பருவம் நான்கு!
இளவேனில் என்பதும் ஒன்று!
நினைக்க இதுபோல் நன்று,
நிலமதில் உண்டோ சொல்லு!

கோடை என்ற பருவம்-இதில்
கொப்பளம் கண்டிடும் சருமம்!
ஆடையும் கேட்கும் விடுமுறை,
அதற்கு இல்லையே படிமுறை!

இலையுதிர் பருவம் துன்பியல்!
இதுவோ இயற்கை உளவியல்
அலைமிகு ஆழிசூழ் உலகதில்
ஆழமாய் பதியும் வாழ்வியல்!

குளிர்மிகு பருவம் இதுவென்று
குறிப்பிட வேண்டுமா சொல்லு
தளிர்களும் தடைப்படும் முறையின்றி
தரணியும் உறங்கிடும் தடையின்றி!
வேறு
பருவத்தே பயிர்செய் என்று,
படித்தவர் சொன்னார் அன்று!
புருவத்தை உயர்த்தா தின்று!
புரிந்து நீ நடப்பது நன்று!
நன்றி
மதிமகன்