சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 274
30/07/2024 செவ்வாய்
விடுமுறை
—————
“வருஷம் தவறாது மூன்றுமுறை..
வந்திடும் அடிக்கடி விடுமுறை..
வாத்தி உமக்கு என்ன குறை..”
வைச்சான் வெடி ஓர் தறுதலை!

“ஊட்டிக்குச் சென்று ஓர்முறை,
உஷ்ணம் தணிக்க விடுமுறை..
வாத்திக்கு வேண்டும் ஒருமுறை,
வசையேன் போடுறாய் தறுதலை!”

“நீண்ட விடுமுறை உமக்குண்டு,
நிம்மதிக்கு என்ன குறையுண்டு?
காண்டு வருகுது உமைக்கண்டு!
கந்தப்பர் உம்வீடு பணக்குன்று!

“உழைத்த வலிபோக விடுமுறை,
உலகில் வேண்டுமடா தறுதலை!
பிழைத்துப் போய்விடு இம்முறை,
பிதற்றாதே மீண்டும் ஓர்முறை!”

“அரசாங்கம் விடுமுறை தருகுது!
அடுத்தவன் வயிறேன் எரியுது!
பிரசங்கம் செய்தாலும் திட்டுது!
பித்துப் பிடித்தேன் அலையுது!”
நன்றி
“மதிமகன்”
(தறுதலை- பொறுப்பில்லாது
ஊர்சுற்றும் ஒருவன்)
(காண்டு- சினம்)