கவி 757
மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி
சிரிக்கும்போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப்படுகின்றது
புரிந்தோரின் வாழ்க்கை மகிழ்ச்சியால் சூழப்படுகின்றது
அறிவுக்கு ஆதாரமே குறையாத முகமலர்ச்சி
அறிந்துகொண்டால் அவருக்கு வந்திடுமோ தளர்ச்சி
இந்தவுடல் வயதாக தோல் சுருங்கும்
சந்தோசத்தை விட்டால் வாழ்வே சுருங்கும்
விலைக்கு வாங்க முடியாது மகிழ்ச்சி
விளைந்துவிட்டால் வாழ்வே கொண்டாட்ட நிகழ்ச்சி
கடினமான சூழ்நிலையை இதுவன்றோ அகற்றும்
துடிப்பாக செயற்படவே மனதிற்கு புகட்டும்
நகைச்சுவை உணர்விருந்தால் வாழ்விலேது இறுக்கம்
பகையேது உறவுக்குள்ளே அன்றாடம் சிறக்கும்
எண்ணங்களின் வண்ணங்களிலே மகிழ்ச்சியின் உற்பத்தி
உண்டாக்கியே உவகையை வாழலாமே நமைச்சுற்றி
இந்த கணம் என்பதுங்கூட மகிழ்ச்சிக்காக
சிந்திப்போம் நேர்மறையாய் மகிழ்ச்சியும் பூக்க
ஜெயம்
22-01-2024