“ மகான் நாவலர் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 19.12.2024
தமிழ்மொழியின் காவலன்
தமிழுக்கும் சைவத்திற்கும் ஒளிகொடுத்த மகான்
வசனநடை கைவந்த வல்லாளன்
உரைநடைத் தமிழை வளர்த்த ஆசான்
மார்கழித் திங்கள் பதினெட்டிலே
மாண்புடனே உதித்தாரே நல்லை நகரினிலே !
தனித்துவமானது நாவலரின் தமிழ்ப்பணி
தன்னையே அர்ப்பணித்தார் தமிழுக்கு
தன்னிரு கண்ணென
போற்றினார் தமிழையும் சைவத்தையும்
தமிழுக்கு ஆற்றினார் தொண்டு
தமிழ்ப்பணி சைவப்பணி கல்விப்பணியென
தனித்துவம் கண்டது மகான் நாவலரின் பணி !
தமிழ் நூல்கள் பலதைப் பதிப்பித்த பதிப்பாசான்
தமிழுக்காகவே அச்சுக் கூடத்தை உருவாக்கிய மகான்
அச்சுப்பதித்து அரும்பெரும் நூல்களைத் தந்த ஆசான்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும்
ஆன்மீக சொற்பொழிவுகள் பிரசங்கங்கள் செய்து
அரும்பணி ஆற்றினாரே தமிழுக்கும் சைவத்திற்கும்
மகான் நாவலரின் பணியோ மகத்துவமானதே
மகான் நாவலர் இல்லையேல்
இன்று சைவமும் இல்லை தமிழும் இல்லையே !