என் மகனே பெருஞ்சொத்தாய் உந்தனுக்கு
காணி நிலமில்லை கரைபுரள பணமுமில்லை
சீதன வளவுமில்லைசில்லறைகள் தானுமில்லை
பரம்பரையின் சொத்துமில்லை பழகியெழ சொந்தமில்லை
ஆனால் வல்லமையும் ஆளுமையும் பெருவளங்கள்
நேசத்துள் அரவணைக்க நெஞ்சார்ந்த உறவு வலை
மறந்தும் பொய்யுரைக்கா மாண்புடனே வாழ்வுமுறை
பாசத்துள் அன்பிழைய கரைந்தெழுதும் அன்பிதயம்
அத்தனையும் நிறைவாக தந்ததனால் மகிழ்வு
பொய்யுரைக்கும் மனிதரை புறந்தள்ளு
காழ்ப்புணர்வு கொண்டோரை விரட்டி எழு
ஊமைக்காயங்கள் உரை சொல்லில் தருவோரை உணர்த்தி எழு
பித்தனென நினைப்போர்க்கு வித்தகத்தால் விதந்து உரை
சத்தமின்றி காரியங்கள் செய்த பின்னும் இன்னும்
செய்தொடரின் செயலூக்க வித்தை இடு
காலம் கனிந்தெழுந்து கரம் இழையும்
உரசி எழும்உணர்வறியா பேய்களிடை
உன்தடமறிந்துஅவர் தொடர உயர்
சுவட்டதனின் பொறிகளினை விதைத்தே நித்தம் எழு