சந்தம் சிந்தும் கவிதை

ப.வை.ஜெயமாலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு272
“அடிக்கல்”
அடிக்கல் நாட்ட
அழைப்பு ஒன்று பெற்றேன்
பெருக்கி உழைப்பால்
பெற்ற பணத்தில் தான்
உதித்த ஊரில்
ஒரு மாளிகை எழுப்ப
விடுத்த அழைப்பு- ஒன்றி
விட்ட பெறா மகவிடமிருந்து.

அம்மா சொல்லி அழும்
கதை ஒன்றாலே
அடிக்கல் நாட்டல் பற்றி
அதீத பயம் கொண்டிருந்தேன்
அம்அப்பா தம்பு
ஆசிரியர் இப்படித்தான்
அடிக்கல் நாட்ட
அழைக்கப்பட்டாராம்.
மகாஜனா எம் பள்ளி அதன்
மாடி மண்டபத்தின்
அடிக்கலை நாட்டினரம்
அதிபர் அழைப்பேற்று.

எண்ணி ஒருவருடம்
இரண்டாம் மாடியதால்
ஏறி இறங்க படிகட்டி
இருந்த நிலையில் அது.
அண்ணை றோசான்
அழகன்பெரி அப்பு மகன்
ஆசையுடன் மாடியிலே
கடிவிளை யாடுகையில்
மண்டை உடைந்ததுவாம்
மாடியாலே விழுபட்டு
வலைபோன்ற கம்பியிலே
வந்து விழுந்ததனால்
துளைகள் பல கண்டு
துவண்டதுவாம் அவன் உடம்பு.

காளை அவன் உடலை
காலன் பலி எடுத்தானாம்
ஆளாய் நின்று அடிக்கல்
நாட்டிய எம் பேரர் தம்பு
பெறாமகனை.
வேளைக்கே அடிக்கல்
வைத்த போதினிலே
சேவல் ஒன்றை பலி கொடுக்க
சிந்திக்க தவறியதால்
அண்ணன் றோசான்
அகால மரணம்
அதாம்.

அம்மா சொன்ன கதை
அடி மனதில் பயம் ஏற்ற
என்னென்று போவாய்
என்கின்றாள் என் மனையாள்.
மரியாதை அழைப்பு
மறுக்கட்டா ,போகட்டா
சொல்லுங்கள் நீங்கள்!
ப.வை.ஜெயபாலன்-