சந்தம் சிந்தும் கவிதை

ப.வை.ஜெயபாலன்

“ஒரு விடுமறை பொழுத
டுபாய் நாடு தந்த மகிழ்வு
———————————-”. . “பகல்பரந்தபொழுதுகளே
பருவமெலாம் கூட
பசுமை எழில் ஒளிரும் எங்கும்
பல மரங்கள். ஆட
எழில் உயர மாட மனை
வானோடு கொஞ்ச
இயங்கும் குளி ரூட்டிகட்டு
இயல்கை வெட்பம் அஞ்ச
தொழில் புரிவோர் வரி பழுவில்
அழுந்தாத தாலே
தூர நாடு வதிவோரும்
வந்துழைப்ப தாலே
அதி கெதியில் நிதி நிலையில்
வளம் கொண்ட நாடு
அன்றாடம் உல்லாச
உலா வருவார் நாடி”

**மன்னர் ஷேக் முகமது மேல்
மக்கள் அபி மானம்
மற்றவரை ஏய்க்காமல்
உழை என்ற வேதம்
என்ன தொகை இருப்பு வரி
என்ற முறை இல்லை
இதனாலே பணம் படைத்தோர்க்
இன் நாடு முல்லை
துன்புறுத்தும் வெட்ப நிலை கூடி நின்று வாட்டின்
தூவும் மழை நாடு எங்கும்
செயற்கை மழை நாட்டில்.”

“பொன் நகைக்கு ஓர் தொகுதி
பொலிவாக நீட்டும்
பூவையர்கள் மனம் மகிழ
மலிவு விலை காட்டும்
நன் நகரம் இதில் எங்கும்
ஆசியர்கள் கூட்டம்
நகை,வீடு,கடை,என்று
முதலீடு போட்டும்
கன்னக் கோல்,கற்பழிப்பு ,கொலை கொள்ளை இல்லை
கண்ணாடி நகைக்கடைகள்
காவல் தேவை இல்லை
இன்நாட்டை போல் ஏன் தான்
எம் நாடு இல்லை
ஏக்கத்தை விடுவிக்க ஏற்றார்
எம்முள் இல்லை.”