வியாழன் கவி -2087!
போனும் போராட்டமும்..
விந்தை நிறை விஞ்ஞானம்
சிந்தை குளிர்ந்தா தந்தது
அஞ்ஞானம் தோற்றுவிடும்
மெய்ஞ்ஞானம் குறுகிவிடும்..
உள்ளங்கை உரசித்தினம்
உலகத்தை சுற்றி வரும்
உயிர்களை வசப்படுத்தி
உணர்வினை மழுங்கடிக்கும்..
நேரத்தை விழுங்கி நல்லா
நேசத்தை விலகச்செய்யும்
பாசத்தை வெறுத்து மெல்ல
பற்றினைத் தன் பாலீர்க்கும்..
படுக்கை அறையில் இராச்சியம்
பார்வைக்கு கேடு பரகசியம்
கல்வியும் இதனால் அன்றோ
கற்றிடும் தோல்வியும் பாடம் தரும்..
குழந்தை முதல் கிழவி வரை
கும்மியடிக்கும் போனிலன்றோ
குறூப் கோல் போட்டுவிட்டால்
பெரும் பசியும் ஓடி விடுமே..
ஒன்றன் பின் ஒன்றாய்
வகையது விளம்பரம் சொல்லும்
புதிய புதிய அறிமுகங்கள்
காசினைக் களவாகிக்கொள்ளும்..
பயனது பல்கிப் பெருகி அதனுள்
பணமது விரயம் புரியுமன்றோ
காதல் முதல் கல்யாணம் குழந்தை
கலந்து சிறப்பது தொலைபேசியில்
தானே…
சிவதர்சனி இராகவன்
8/1/2024