வியாழன் கவிதை

” போனும் போராட்டமும் “

ரஜனி அன்ரன்

“ போனும் போராட்டமும் “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.01.2025

கையுக்குள் பையுக்குள் அடக்கம்
கண்கவரும் வண்ண மயம்
கண்ணாடிக் கூண்டுக்குள்
காட்டுகின்ற அதிசயம்
கண்கவரும் காட்சிகள்
தேடலுக்கு விருந்துகள்
சின்னக் கருவிக்குள்
பெரிய உலகம் கைபேசி !

தொடுதிரையின் வண்ணங்கள்
தொட்டு விட்டால் யுகங்கள்
இணையத்தின் வலைக்குள் இசைவுகள்
ஒருமைப்பாடு காட்டி உலகை வலம்வர
கைபேசியின் ஒளியில் கனவுகள் மிதக்கிறதே !

கைவிரல்களின் உரசலில்
உறவுகளின் கூட்டிணைவில்
காட்சிகள் பதிவாக்கலில்
காலநேரத்தை மறக்கடிக்கும் சாலை
போராட்டங்கள் போர்க்களங்களை
காட்சிப்படுத்தும் ஆயுதம்
தனிமையைப் போக்கிடும் கருவி
உணர்வுகள் மறக்கப்பட தொடர்புகள் குறைய
வாழ்வினை மாற்றிவிட்ட மாயக்காரி கைபேசி !