அருமையாக இருந்த தொலைபேசி
போன் பூத்தில் உழைத்த பணத்தை
செலவழித்த எம் காலம்
தமிழில் விளம்பரம் செய்த சுவிஸ்கொம்
காலத்தின் மாற்றம் சிறிய போனாக எம்கைகளில்
போகுமிடமெல்லாம் பேசி மகிழ
படிப்படியாக வளர்ந்த விஞ்ஞான வளர்ச்சி
கைகளில் சிறிய கணணியாக மாற
விழித்தால் முகம் பார்க்கும் போன்
உடனுக்கு உடன் தகவல்கள் பறக்க
உறவுகளுக்கு இடையே பிரிவு ஏற்பட
தனிமையில் வாழ வேண்டிய நிலை
செல்பி என்னும் மோகம்
உயிரைக்குடிக்கும் போன்
வாகனம் ஓட்டும் போதும் கையில்
அதனால் விபத்து நடக்க
அத்தியாவசிய பொருளாக என் கையில்
நன்றி
வணக்கம்