போதை தரும் வாதை
போதுமென்ற துன்பம்
பாதைமாற்றும் கீதை
படிக்க மறந்த பிள்ளை
இளையோர் வாழ்வை
சிதறடிக்கும்
புரிந்து செய்கிறார் பலர்
புரியாமல் செய்கிறார் சிலர்
தாமே தம் தலையில்
மண்ணை வாரி இறைப்பர்
முடிவில் செய்வதறியாது தவிப்பர்
விளையாட்டாக ஆரம்பித்து
வினையாக முடியும் இச்செயல்
பெற்றாரை குடும்பத்தை
சமூகத்தை நாசமாக்கி விடும்
எடுத்து சொன்னாலும் புரியாது
எடுத்துரைக்காமல் விடவும் முடியாது
இருதலைக் கொள்ளியான
இவர் வாழ்வு
எதில் போய் முடியுமெனத் தெரியாது!